எங்களைப் பற்றி

ஓம் ஈஸ்வரா குருதேவா

மனிதன் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது. மனம் அடிக்கடி சிதறுவதால் தீய உணர்வுகள் சந்தர்ப்ப வசத்தால் ஆட்கொள்கின்றன. அதனால் மனிதன் மற்றவர்களுடன் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வாழ்க்கையை வாழத் தவறவிடுகிறான். திடீரென்று சிலரை வெறுத்தலும், விரும்புவதும் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. இன்பம் வந்ததும் கூடவே இறுமாப்பும் வந்துவிடுகின்றது. துன்பம் ஏற்படின் துவண்டு போதலும் ஏற்படுகின்றது. இந்த இரு வகையான மனநிலைகளை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றான். மனித வாழ்வு ஆன்மிக வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தை நம் ஆன்மவிடுதலைக்கு வழியை இத்தியானாலயம் எடுத்து.

அத்வைதம், துவைதம், வஷிஷ்டாத்வைதம் ஞானத்தின் பீடமான ஈஸ்வரமகரிசி தவ சிரேஷ்டர்களுக்கு அருளாசி அருளியவர், சற்குரு இரசமணி சித்தர், ஈஸ்வரப்பட்டருடைய மகிமையை எளியேன் அறிந்துள்ளேன். என் இளம் பிராயத்திலிருந்தே. இங்ஙனம் இத்தியானாலயத்தில் தன்னலமற்ற தயை அன்பும், பகுத்தறிவிற்கு பொருத்தமான மெய்ஞான மொழிகளும் என்னைக் காந்தம் போல் கவர்ந்து இழுத்தன

Recent Post