பக்தர்களின் வாழ்வில் மஹரிஷியின் மகிமை
நான் சேலம் மாவட்டம் அயோத்தியப் பட்டணத்தில் வசித்து வருகிறேன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு. ஈஸ்வரப்பட்டர் என் தோழி மூலம் ஓராண்டு காலத்திற்கு முன் எனக்குத் தெரியும். என் தோழி ஈஸ்வரபட்டரின் புகைப்படத்தையும், வழிபடும் முறையையும் எனக்கு கூறினாள். அன்றையிலிருந்து நானும் ஈஸ்வரமகரிஷியை வணங்கி வருகிறேன். அவர்களுடைய தியானாலய அமைப்பிற்கு உதவி செய்து வருகிறேன் மிகவும் அமைதியான சூழல் சுற்றிலும் மலைகள் அரணாக பார்க்கவும் மனம் ஒன்றிவிடுகிறது ஈஸ்வர மகரிஷியின் மேல்.
ஒரு நாள் என் மகள் பள்ளியில் இருந்து வரும்சமயம், வானம் இருட்டி கடும் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டிருந்தது. என் மகளுக்கு 5 வயதே ஆகிறது. என் தந்தை அவளை பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார் . மிகவும் பலத்த காற்று , இடி இடித்துக் கொண்டிருந்தது .அவ்வேளையில் என் மனம் மிகவும் பதைபதைத்தது .உடனே மகரிஷியின் புகைப்படம் அருகே சென்று என் மகள் வீடு வந்து சேரும் வரை மழை வரக்கூடாது என்று மனம் உருகி மகரிஷியை உருக்கமாக வேண்டினேன் .
நேரம் கடந்து கொண்டிருந்தது, வானம் இருட்டி அடுத்த நிமிடம் மழைபெய்யலாம் எனும் சூழலில் சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்யவில்லை.
என் மகள் வருகையை எதிர்பார்த்து நான் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! நான் வேண்டியபடியே என் மகளை என் தந்தையார் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் வாசற்படியில் ஏற மழை அடுத்தநொடி பலமாக மிகப்பலமாக ஒரு மணிநேரம் விடாமல் பெய்தது. உடனே நான் மகரிஷிக்கு நன்றி கூறினேன். அவரை மிகவும் வாழ்த்தி நன்றி கூறினேன் . ஈஸ்வர மகரிஷியின் அன்பு அளவு கடந்து எல்லையற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்
ஈஸ்வர மகரிஷிக்கு நன்றி !
கல்யாணதடைத் நீங்கியது
என் பெயர் ஜெகன் நான் தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவன். நான் ஒரு அரசு மருத்துவர் முப்பத்துஐந்து வயதாகிறது. எனக்கு திருமணத்தில் தடை ஏற்பட்டுக்கொண்டே வந்தது பல ஜோதிடர்களை சந்தித்த பொழுது குலதெய்வம் சென்று வணங்கிவாருங்கள் திருமணத்தடை நீங்கி விடும் என்று கூறினார்கள் குலதெய்வ வழிபாடு செய்து பல மாதங்கள் ஆகியும் திருமணம் ஆகவில்லை. என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் மகரிஷி ஈஸ்வரப்பட்டர் வாக்கை கோவையில் ஒருவர் கூறுவதாக சொன்னார். அதில் எனக்கு சிறிதும் நம்பிக்கையின்றி இருந்தேன். ஆதலால் நான் செல்லவில்லை. ஆனால் என் பெற்றோர் மட்டும் சென்றுவந்தனர்
அதன் பிறகு சில நாட்கள் கழித்து நானும் என் நண்பனும் தியானாலயம் அமைய இருக்கும் இடத்திற்குச் சென்றோம் அங்கு மகரிஷியின் சீடர்களைச் சந்தித்தோம். அவர்கள் அங்கே என்னிடம் பதினோறு எலுமிச்சைக்கனிகளைக் கொடுத்தனுப்பினர். அதனை இரண்டு துண்டாக்கி காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்குபோடச் சொன்னார்கள். அதன்படி செய்து வந்தேன், அவர் கூறியபடி இரண்டுவாரங்கள் கழித்து நல்லவரன் அமைந்தது . ஈஸ்வரப்பட்டர்க்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இன்றும் அவர்கட்கு சேவை செய்து வருகிறேன்.